தமிழ்நாட்டை மறந்திட்டேனா? - அசின் பேட்டி
இங்கே கமல், அங்கே அமீர்கான் என அசின் இப்போ ஜீனியஸ்களின்
தேவதை!
பொண்ணை சென்னைப் பக்கம் பார்த்தே நாளாச்சு. போன் போட்டால்,
சுவிட்ச்டு ஆஃப். 'ஆஹா... என்ன நடக்குது?'
என ஃபாலோஅப் நடத்தியதில், சென்னை வீட்டில் சிக்கியது கிளி.
''ஹாய்... இன்னிக்கு ஒரே நாள்தான் சென்னை. நைட் மும்பைக்கு ஃப்ளைட்
பிடிக்கணும். ஸாரி... உங்களோட ரிலாக்ஸ்டா ஒரு டின்னர் பேச்சுக்குக்கூட
டைம் இல்லே!'' மும்முரமாக பேக்கிங்கில் பேசுகிறார் அசின்.
''ஒரு எஸ்.எம்.எஸ்.கூட இல்லை. தமிழ்நாட்டையும் என்னையும் மறந்துட்டீங்களா..?''
என்றால்,
''ஹலோ... இந்தி 'கஜினி'க்காக ச்சும்மா கொஞ்ச நாள் மும்பை பக்கம் நடமாடறேன்.
உடனே தமிழ்நாட்டை மறந்துட்டேன்னு பழிபோட்டா என்ன அர்த்தம்? எப்பவும்
சென்னைதான் என் அட்ரஸ்!''
''அது! ஆமா, இந்தியாவே எதிர்பார்க்கிற இந்தி 'கஜினி'யோட ஹீரோயினா
இருக்கிறது எப்படி இருக்கு..?''
''வாவ்...னு கத்தத் தோணுது. என் கேரியர் பெஸ்ட்ல முக்கிய மான படம் 'கஜினி'.
தமிழ்ல பண்ணினப்பவே அவ்ளோ ரெஸ் பான்ஸ்! அதையே இந்தியில் பண்றது
என் லக்! அதுவும் அமீர்கான்ஜி. இந்தியாவே கொண்டாடுற மனுஷன். 'தாரே ஜமீன் பர்'
மாதிரி ஒரு படத்தை அவரைத் தவிர வேறு யார் பண்ண முடியும்? ஆக்சுவலா
நான் அவர் ரசிகை. இப்போ அவரோடு நடிக்கும்போது அந்த மரியாதை இன்னும்
கூடுது. ரொம்ப டைமிங் சென்ஸோட இருப்பார்; நிறைய டிப்ஸ் தருவார்; மனசுவிட்டுப்
பாராட்டுவார்னு நிஜத்துலயும் அவர் ஸ்டார்தான்!
முருகதாஸ் இன்னும் இன்னும் இழைச்சு இந்தி 'கஜினி' பண்றார். இப்போதான்
ஆப்பிரிக்கா போய் அமீர்ஜியோடு ரெண்டு சாங்ஸ் ஆடிட்டு வந்தேன். நமீபியாவில்
ஒண்ணு, சவுத் ஆப்பிரிக்காவில் ஒண்ணுனு அத்தனை அழகா வந்திருக்கு சாங்ஸ்!''
''அதிருக்கட்டும்... 8 கோடி ரூபாய் விளம்பர கான்ட்ராக்ட்ல ஒப்பந்தமானதால்,
இன்னும் ஒரு வருஷத்துக்கு சினிமாவில் நடிக்க மாட்டீங்களாமே?''
''நீங்க சொன்னதில் பாதிதான் உண்மை. விஷயம் இதுதான். வருஷத்தில் 210
நாட்களுக்கு அவங்களுக்குத் தேதிகள் கொடுத்திருக்கேன். தமிழ், இந்தி,
தெலுங்குன்னு படங்களிலும் விளம்பரங்களிலும்... பிடிச்சிருந்தா நடிச்சுத்
தருவேன்னு ஒப்பந்தம். அந்த 210 தேதிகளில் என் கால்ஷீட்டை அவங்க
பார்த்துக்குவாங்க. நேத்துதான் அட்வான்ஸ் வாங்கினேன். மும்பையில் இதுதான்
நடைமுறை. நம்ம மக்களுக்குத்தான் இது புதுசு!''
''சரி... நம்ம 'தசாவதாரம்' பத்திச் சொல்லுங்க..?''
''அசின் அதிர்ஷ்டசாலி! கமல் சார் நடிச்ச மலையாளப் படங்களை எல்லாம்
சின்ன வயசுல ரசிச்சு ரசிச்சுப் பார்த்திருக்கேன். இப்போ அவருக்கு ஹீரோயினா
இருக்கிறது ஸ்வீட் எக்ஸ்பீரியன்ஸ். 'தசாவதாரம்'ல புதுப் புது கெட்டப்ல
பின்னியெடுக்கிறார். பக்கத்துலேயேதான் உட்கார்ந்திருப்பார். ஆனா, யாருக்கும்
அடையாளம் தெரியாது. ஒரு தடவை அவர் பொண்ணுங்க ஸ்ருதியும் அக்ஷராவும்
வந்து டாடி எங்கேனு வலை வீசித் தேடினாங்க. எதிரேயே கமல் சார் இருந்தும்
அவங்களால கண்டுபிடிக்கமுடியலை. அப்புறம் நாங்கதான் கமல் சாரைக்
காட்டிக் கொடுத்தோம்.
படத்துல எனக்கு மடிசார் கெட்டப் ஒண்ணு இருக்கு. கௌதமி மேடம்தான்
மடிசார் கட்டச் சொல்லித் தந்தாங்க. இந்தியோ, தமிழோ, மலையாளமோ...
என் படங்கள்ல எனக்கு நான்தான் டப்பிங் பேசுவேன். 'தசாவதாரம்'ல ஐயங்கார்
பாஷை சரியா வரலை. கமல் சார்தான் சொல்லித் தந்தார். இந்தப் படம் வந்ததும்,
'அட, அசத்துதே இந்தப் பொண்ணு!'னு சொல்லப் போறீங்க. அந்தப் பெருமையை
இப்பவே கமல் சாருக்கு அர்ப்பணிக்கிறேன்!''
''அதெல்லாம் ஓ.கே! கதை என்னன்னு...''
''ஃப்ளைட்டுக்கு டயமாச்சு!''
TAMIL CINEMA ASIN, ACTORS ASIN, SOUTH INDIAN ASIAN, CINEMA ASIN